கந்தர்வகோட்டை

gkt-nameboard

அமைவிடம்

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தாலுகா அமைந்துள்ளது. பல சிறு மற்றும் பெரு கிராமங்களை உள்ளடக்கியதுதான் இந்த அழகிய நகரம். இப்பகுதி மக்கள் இந்த நகரத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக GKT என்று அழைக்கின்றனர். சிறந்த கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்கும் தஞ்சைக்கு அருகில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. இங்கு பழைமைவாய்ந்த கோயில்களும், தேவாலயங்களும் மசூதிகளும் இருக்கின்றன.

போக்குவரத்து

இது பல முக்கிய நகரங்களின் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. தஞ்சாவூர் இங்கிருந்து 28.8 கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டை 32.4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் திருச்சிராப்பள்ளி மாநகரம் இங்கிருந்து 52.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்படி தென்தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கு மையப்பகுதிபோல் இதை நாம் பார்க்கமுடியும். ஏனெனில் பட்டுக்கோட்டை , கறம்பக்குடி ஆகிய நகரங்கள் முறையே 39.4 கி.மீ, 21.9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும் .

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தாலும் விவசாயம் செய்வதே இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாகும். இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதை பெருமையாக கருதுகின்றனர். நெல், வாழை, கரும்பு, சோளம், கடலை, உளுந்து போன்றவை இங்கு விளைவிக்கப்படுகிறது. முந்திரி மரங்கள் நிறைந்த காடுகள் இப்பகுதியில் இருப்பதால் மக்கள் முந்திரி பருப்பு எடுப்பதையும் தங்கள் தொழிலாக செய்து வருகினறனர். குறிப்பாக ஆதனக்கோட்டை பகுதியில் இதனையே தங்கள் பிரதான தொழிலாக செய்து வருபவர்கள் பலர் உள்ளனர்.

வணிகம்

இந்கு ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதல் அனைத்து தேவைகளுக்கும் கடைகள் இங்குள்ளது. அரசு மருத்துவமனை, மருந்தகங்கள், உணவகங்கள், காய்கறி சந்தைகள் ஆகியவை அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *